search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான வடிவங்களில் மண்பானைகள்
    X
    கரூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான வடிவங்களில் மண்பானைகள்

    கரூரில் மண்பானை விற்பனை மும்முரம்

    மண்பானையில் நீர் ஊற்றி வைத்து, அந்த நீரை குடித்து வருவது உடல் நலத்திற்கு நல்லது என்பதாலும், தாகம் தீர்க்கும் என்பதாலும் தற்போது மண்பாண்ட பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தினமும் வெயிலின் தாக்கம் அதிமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இதில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட உடலை குளிர்ச்சியூட்டும் பொருட்களை அதிக அளவில் வாங்கி உண்பதை காணமுடிகிறது. இவ்வாறு பல வகைகளை வாங்கி சாப்பிடுவது ஒரு பக்கம். இது பக்கம் இருந்தாலும், மண்பானையில் நீர் ஊற்றி வைத்து, அந்த நீரை குடித்து வருவது உடல் நலத்திற்கு நல்லது என்பதாலும், தாகம் தீர்க்கும் என்பதாலும் தற்போது மண்பாண்ட பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கரூர் பகுதிகளில் சாலையோரங்களில் மண்பானைகள் விற்பனை அமோக மாக நடக்கிறது.

    இதுகுறித்து கரூர் தாலுகா அலுவலகம் பகுதியில் மண்பானைகள் வைத்து விற்பனை செய்யும் ஒருவர் கூறுகையில், மண்பானையில் குழாய் வைத்து விற்கப்படும் பானை, சின்னபானை, டம்லர், கருப்பு சட்டி, வடசட்டி, உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் மண்பானைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் குழாய் வைத்த பானைகள் 15 லிட்டர், 17 லிட்டர், 20 லிட்டர் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு ரூ.200 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன. குழாய் இல்லாமல் உள்ள மண்பானைகள் ரூ, 200 முதல் ரூ.350 வரை விற்கப்படுறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.
    Next Story
    ×