search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ - எல் முருகன்
    X
    வைகோ - எல் முருகன்

    நடிகர் விவேக் மறைவு- அரசியல் தலைவர்கள் இரங்கல்

    விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    சென்னை:

    நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

    விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நடிகர் விவேக் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    * தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி நகைச்சுவையாக வெளிப்படுத்தினார் நடிகர் விவேக் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

    * பன்முகத்திறன் கொண்ட விவேக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    * பசுமை புரட்சி, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் விவேக் என்று தமிழக பா.ஜனதா தலைவர்  எல். முருகன் தெரிவித்துள்ளார்.

    நடிகர் விவேக்

    * மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துகளை பரப்பியதால் பெரியார் விருது பெற்றவர் விவேக் என்று கி.வீரமணி கூறினார்.

    * சுற்றுச்சூழல் ஆர்வலராக, முற்போக்கு சிந்தனையோடு அறிவார்ந்த கருத்துகளை பரப்பியவர் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    * சிறந்த நடிப்பாலும், உயர்ந்த பண்பாலும் அனைத்து மக்களின் அன்பையும் பெற்றவர் விவேக் என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

    * நடிகர் விவேக் உடலுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
    Next Story
    ×