search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம்- சென்னை டாக்டர் வீடியோவில் விழிப்புணர்வு

    கொரோனா பரவல் நல்லதா? என்று கேட்டால் நல்லதுதான் என சென்னை முகப்பேரை சேர்ந்த டாக்டர் ஜாக்சன் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

    சென்னை: 

    கொரோனா 2-வது அலையால் மக்கள் மத்தியில் பீதி நிலவும் நிலையில் சென்னை முகப்பேரை சேர்ந்த டாக்டர் ஜாக்சன் என்பவர் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கொரோனா 2-வது அலை நம்மை பீதியில் ஆழ்த்தி கொண்டிருக்கிறது. கொரோனா 1-வது அலைக்கும், 2-வது அலைக்கும் என்ன வித்தியாசம் என்றால்... கொரோனா வைரசின் படம் பார்த்திருப்பீர்கள். சுற்றி முள் போன்ற தோற்றம் இருக்கும். அதன் பெயர் ஸ்பைக் புரோட்டீன். பசை தன்மை அதிகமான இந்த வைரஸ் உள்ளே போய் மூச்சுக் குழாயில் ஒட்டிவிடுகிறது.

    முதல் கொரோனாவை விட 2-வது அலை கொரோனா இப்படி உள்ளது. இதனால் அதிகமாக 2-வது அலை கொரோனா பரவுகிறது. ஒருத்தருக்கு வந்தால் எல்லோருக்கும் வந்துவிடும். இப்படி பரவும் கொரோனா மரணத்தை அதிகமாக உருவாக்குகிறதா? என்றால் இல்லை. இதனை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இன்பெக்‌ஷன் பெட்டிலிட்டி ரேட் (ஐ.எப்.ஆர்.) என்று கூறுவார்கள்.

    இது கொரோனாவுக்கு 1-ல் இருந்து 1.5 சதவீதம் வரை உள்ளது. இது எல்லா நோய்களுக்குமானது தான். சமுதாயத்தில் 1 முதல் 1.5 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா மரணத்தை விளைவிக்கிறது. இது ரொம்ப சாதாரண வி‌ஷயம்.

    இது எல்லா நோய்களுக்கும் உள்ளதுதான். எனவே யாரும் பயப்பட வேண்டாம்.

    அடுத்தபடியாக கொரோனா பரவல் நல்லதா? என்று கேட்டால் நல்லதுதான். எந்த ஒரு கிருமியும் புதிதாக வந்தால் 3-ல் 2 பங்கு பரவ செய்தால்தான் சமுதாயம் நன்றாக இருக்க முடியும். இந்த பரவுதல்தான் இயற்கையான தடுப்பூசி. ஆண்டவன் கொடுத்த வரம்.

    அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை செய்தாலும் கொரோனா இருக்கும். அதனால் யாரும் பயப்பட வேண்டாம். 100-க்கு 85 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லாமல் உடலுக்குள் வந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கி போய் கொண்டே இருக்கும். அதனால் சும்மா... சும்மா போய் செக் பண்ணி பார்த்துவிட்டு கொரோனா இருக்குன்னு பயப்பட வேண்டாம்.

    மீதம் உள்ள 10 சதவீதம் பேருக்கு காய்ச்சல், சளி வருகிறது. அது மாத்திரை போட்டாலே சரியாகிவிடும். 5 சதவீதம் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். இதில் ஒருவருக்கு மரணம் நிகழலாம். இதனால் பயப்பட வேண்டாம்.

    கொரோனா வந்தாலே மரணித்து விடுவோம் என்று மனநலம் பாதித்த மக்கள் நிறைய பேர் உள்ளனர். இந்தியாவில் 10 கோடி பேருக்கு பரவுவதற்கு 1¼ ஆண்டாகி உள்ளது. இன்னும் 100 கோடி பேருக்கு பரவலாம். எனவே நாம் எத்தனை பேருக்கு வந்திருக்கு...என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.

    இந்தியாவில் சராசரியாக வருடத்துக்கு 85 லட்சம் பேர் இறக்கிறார்கள். கொரோனா ஆண்டான கடந்த வருடம் இந்த எண்ணிக்கை பெரிதாக உயரவில்லை. கொரோனாவால் கூடுதல் மரணங்கள் நிகழவில்லை. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    கொரோனா எங்கேயும் போகாது. இங்கேதான் இருக்கும். அதனை நினைத்துக் கொண்டே இருந்தால் மற்ற வி‌ஷயங்களில் நாம் கவனம் செலுத்த முடியாது. அடுத்து 3-வது, 4-வது அலை வரும். இதையே பார்த்துக் கொண்டு இருக்காமல் நமது வேலையை பார்க்க வேண்டியதுதான்.

    கொரோனா வந்தால் யாரும் பயப்பட வேண்டாம். தைரியமாக இருக்க வேண்டும். பயப்பட்டால் ‘கார்ட்டீரியர்’ லெவல் கூடி விடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். எனவே பயப்படாமல் தைரியமாக இருங்கள்.

    கோப்புப்படம்

    காய்ச்சல், சளி வந்தால் பாராசிட்டமால் மாத்திரையை வைத்துக் கொள்ளுங்கள். 5 நாளைக்கு 6 மணிநேரத்துக்கு ஒரு முறை மாத்திரை போட வேண்டும். இதற்கு டாக்டர் ஆலோசனையே தேவை இல்லை. காய்ச்சல் வர விட்டு விடாதீர்கள்.

    மூச்சுத்திணறல் உள்ளது என்பது போன்ற நிலை ஏற்பட்டால் மட்டும் கண்டிப்பாக ஆஸ்பத்திரி சென்று விட வேண்டும்.

    கொரோனா காலத்தில் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரையில் மாஸ்கில் உள்ள துவாரத்தை விட கொரோனா வைரஸ் சிறியது. அதனால் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும் அரசாங்கம் சொல்வதால் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். அரசாங்கம் சொல்வதால் தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகு 2 நாட்கள் காய்ச்சல், உடல்வலி இருக்கும். அப்படி இருந்தால் தடுப்பூசி வேலை செய்வதாக அர்த்தம். அதனால் பயப்பட வேண்டியது இல்லை.

    டாக்டர்கள் உடல் நிலை முடியாமல் வருபவர்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும். ‘‘நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் சிகிச்சை அளிக்க வேண்டும்.

    கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம். விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். போர் வந்தால் பாதிப்பு வரும். அதற்காக பயந்து பின்வாங்க முடியுமா? வீரர்கள் போல டாக்டர்களும், அரசு எந்திரங்களும் உள்ளன.

    எனவே டாக்டர்கள் பயமுறுத்தாமல் பொது மக்களை விழிப்படைய செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும். கொரோனாவை விட பரபரப்பான வேறு ஒரு வி‌ஷயம் வரும் வரை கொரோனா இருந்து கொண்டுதான் இருக்கும். உதாரணத்துக்கு தேர்தல் காலத்தில் கொரோனாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.

    எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லோரும் அவரவர் வேலைகளை பாருங்கள். பயமின்றி வாழுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×