search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன்கடையில் சானிடைசர் உபயோகிக்காமல் பொதுமக்கள் பயோமெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதை படத்தில் காணலாம்
    X
    ரேஷன்கடையில் சானிடைசர் உபயோகிக்காமல் பொதுமக்கள் பயோமெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதை படத்தில் காணலாம்

    கொரோனா பரவல் எதிரொலி: ரேஷன் கடைகளில் விரல்ரேகை வைக்க தயங்கும் பொதுமக்கள்

    தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை பரவி வரும் நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் கடைக்கு வரும் அனைவரும் விரல் ரேகையை பதிவு செய்கின்றனர்.
    சென்னை:

    அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற உணவு பொருட்களும், மண்எண்ணெய் போன்றவையும் ரேஷன் கடைகளில் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்குவதற்கு மாத தொடக்கத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கு வருவது வழக்கம்.

    தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பரவி வரும் நிலையில் ரேஷன் கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

    அத்துடன் பொருட்கள் வாங்குபவர்கள் தங்கள் விரல் ரேகையை பயோமெட்ரிக் எந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது நோய் பரவும் நிலையில் விரல் ரேகையை பதிவு செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்களை வாங்க வந்தவர்கள் கூறியதாவது:-

    ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்கச் செல்லும்போது முதலில் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவராவது ஒருவர் பயோமெட்ரிக் எந்திரத்தில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகுதான் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சில நேரங்களில் ஒழுங்காக விரல் ரேகை பதியவில்லை என்றால் திருப்பி அனுப்பப்படும் நிலையும் உள்ளது.

    கொரோனா வைரஸ்

    இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை பரவி வரும் நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் கடைக்கு வரும் அனைவரும் விரல் ரேகையை பதிவு செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்யும்போது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் கூட அன்று கடையில் உணவு பொருள் வாங்க வரும் அனைவருக்கும் எளிதில் கொரோனா வைரஸ் பரவிவிடும்.

    இதனால் தற்போது பயோமெட்ரிக் எந்திரத்தில் விரல் ரேகையை பதிய தயக்கமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நோய் பரவலை தடுக்க தற்காலிக ஏற்பாடாக பயோமெட்ரிக் எந்திரத்தில் விரல் ரேகையை பதிவதற்கு பதிலாக மாற்று வழி இருக்கிறதா? என்று பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×