
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது.
முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து முதியவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்தது.

தமிழகத்தில் இதுவரை 34 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 148 பேர் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். நேற்று மட்டும் 30 ஆயிரத்து 113 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தமிழகத்துக்கு தேவையான அளவு தடுப்பூசிகள் இருப்பில் இருப்பதாகவும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து 13 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.