
கோவை இருகூர் அருகே உள்ள தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயசுந்தரம் (வயது 58). நேற்று இவர் தனது சைக்கிளில் கோவை- இருகூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய ஜெயசுந்தரம் கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.