என் மலர்

  செய்திகள்

  வழக்கு பதிவு
  X
  வழக்கு பதிவு

  ராமநாதபுரம் அருகே பா.ஜனதா நிர்வாகிக்கு கத்திக்குத்து- அ.ம.மு.க.வினர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் அருகே பாரதிய ஜனதா நிர்வாகியை கத்தியால் குத்தியது தொடர்பாக அ.ம.மு.க.வினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் அருகே நல்லிருக்கையை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 42.) பா.ஜனதா மாவட்ட அமைப்பு சாரா பிரிவு துணை தலைவராக உள்ளார்.

  இவர் நேற்று மாலை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை வரவேற்கும் வகையில் இவரது கிராமத்தில் கொடி மற்றும் தோரணங்களை கட்டியிருந்தார். இந்த நிலையில் பா. ஜனதா வேட்பாளர் வருவதற்கு தாமதமானது.

  இதை தொடர்ந்து நல்லிருக்கை அ.ம.மு.க. நிர்வாகி கர்ணன், பா. ஜனதா நிர்வாகி முத்துக்குமாரிடம் அ.ம.மு.க வேட்பாளர் வருகை தர இருப்பதால் கொடிகளை அகற்றும்படி தெரிவித்தார்.

  இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முத்துக்குமாரை கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. முத்துக்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது தொடர்பாக நல்லிருக்கை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கர்ணன், கமல், திருநாவுக்கரசு ஆகிய 3 பேர் மீது உத்திரகோசமங்கை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  Next Story
  ×