search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குக செல்வம்
    X
    குக செல்வம்

    திமுக அதிருப்தி எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்

    பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் கு.க.செல்வம் தன்னை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டார்.
    சென்னை:

    சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம். தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 4-ந்தேதி டெல்லியல் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இருந்தாலும் சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தார்.

    இந்தநிலையில், கு.க.செல்வம் சென்னை தியாகராயநகரில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. உடன் மாநில துணைத்தலைவர்கள் நயினார் நாகேந்திரன், நரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சி.டி.ரவி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா மற்றும் தினகரனின் பலமும், பலவீனமும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தெரியும். இதனால் அ.தி.மு.க.வில் அவர்களை இணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எங்களை பொறுத்தவரையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.கவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கினாலும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×