
கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, வினோத்குமார் மற்றும் போலீசார் கரடிசித்தூர் கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சாம்பன் மகன் வீராசாமி(வயது45), தொப்புளான் மகன் பழனிச்சாமி(37), தேவராஜ் மகன் கோவிந்தன்(40), சக்திவேல் மகன் அலெக்ஸ்பாண்டியன்(27), பிச்சைக்காரன் மகன் கமலகண்ணன்(30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.