search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன் பேசிய காட்சி.
    X
    துரைமுருகன் பேசிய காட்சி.

    வாலாஜா மேற்கு ஒன்றிய திமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்- துரைமுருகன் பங்கேற்பு

    வாலாஜா மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வாலாஜா மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சிப்காட் அடுத்த அக்ராவரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வாலாஜா ஒன்றிய தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் அக்ராவரம் ஏ.கே.முருகன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய அவைத்தலைவர் வாசுதேவன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், செல்வம், உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட் வரவேற்புரை ஆற்றினார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் நரசிம்மன், காட்பாடி ஒன்றிய செயலாளர் சரவணன், தயாளமூர்த்தி, வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், கத்தாரிகுப்பம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு, முன்னாள் துணைத் தலைவர் ராமச்சந்திரன், கோகுலன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயகுமார் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும், வாக்குச் சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×