search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,760-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியே காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது. தங்கம் இறக்குமதிக்கு ஏற்கனவே 125 சதவீதம் சுங்கவரி இருந்தது. அது தற்போது 10 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    சுங்கவரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இன்று 1 பவுன் ரூ.36,760-க்கு விற்கப்படுகிறது. 1 கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இன்று 1 கிராம் தங்கம் ரூ.4,595-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 2 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

    இதேபோல வெள்ளி இறக்குமதி மீதான சுங்கவரியும் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

    வெள்ளி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2.40 குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் ரூ.79.20-க்கு விற்கப்பட்ட வெள்ளி, இன்று ரூ.76.80-க்கு விற்கப்படுகிறது.

    1 கிலோ பார் வெள்ளி ஒரே நாளில் ரூ.2,400 குறைந்துள்ளது. நேற்று ரூ.79,200-க்கு விற்கப்பட்ட 1 கிலோ பார் வெள்ளி இன்று ரூ.76,800-க்கு விற்கப்படுகிறது.
    Next Story
    ×