என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  மதுரையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை:

  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சின்னஇரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளிமலை (வயது 39). லாரி டிரைவர்.

  இவர் மோட்டார் சைக்கிளில் இன்று காலை மதுரைக்கு வந்தார். கோரிப்பாளையம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வெள்ளிமலை தூக்கி வீசப்பட்டார்.

  காலையில் வாகன போக்குவரத்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வெள்ளி மலையை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.

  ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்களில் வந்த வெள்ளிமலை ஹெல்மெட் அணிந்திருந்தபோதும் அது அவரை காப்பாற்றவில்லை. ஹெல்மெட் உடைந்து சேதமானதோடு வெள்ளி மலையும் தலை நசுங்கி மூளை வெளியே சிதறிய நிலையில் பிணமாக கிடந்தது அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

  விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தல்லாகுளம் போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் வெள்ளிமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், டிப்பர் லாரியை ஓட்டி வந்த மாணிக்கம் (44) என்பவரை கைது செய்தனர். இவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருச்சியில் உள்ள ஒரு லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்து எம்.சாண்ட் மணல் பாரம் ஏற்றிக்கொண்டு மதுரை கருப்பாயூரணியில் இறக்கி விட்டு மீண்டும் திருச்சி சென்ற போதுதான் மோட் டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.

  Next Story
  ×