search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    பிற மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைத்தாலும் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட அளவில் உள்ள கொரோனா பாதிப்புகள் பற்றியும் கேட்டறிந்தார். கொரோனா தடுப்பு, தடுப்பூசி பணி, புதிய தளர்வுகள் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசித்தார்.

    அதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * நாட்டிலேயே கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.

    * பிற மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைத்தாலும் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை.

    * சென்னையை பொறுத்தவரை ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    * கொரோனாவுக்கு தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெறுவோர் 4,629 பேர்.

    * தமிழகத்தில் 1.86 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    * தமிழகத்தை போல் பிற மாநிலங்களும் ஆர்டிபிசிஆர் சோதனையை நடத்த பிரதமர் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×