search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்கள்
    X
    மீன்கள்

    சேதுபாவாசத்திரத்தில் டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் பாதிப்பு

    சேதுபாவாசத்திரத்தி்ல் டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
    சேதுபாவாசத்திரம்:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 146 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். தற்போது டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் மீன்பிடி தொழில் நஷ்டத்தில் இயங்குவதாகவும், மீன்கள் விலை குறைந்துகொண்டே வருவதாகவும் அரசு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறியதாவது:-

    டீசல் விலை 30 ரூபாயாக இருக்கும் போது ஒரு கிலோ இறால் விலை 900 ரூபாயாக இருந்தது. தற்போது டீசல் விலை 82 ரூபாயாக உள்ள நிலையில் இறால் விலை 300 ரூபாயாக உள்ளது. .600 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்த வஞ்சிரம், கொடுவாய், காளை, வாவல் போன்ற மீன்கள் தற்போது 300 ரூபாயாக உள்ளது. 30 கவுண்ட 900 ரூபாய்க்கு விற்பனை செய்த கருவண்டு என கூறப்படும் உயர்ந்த வகை இறால் தற்போது 400 ரூபாயாக உள்ளது. டீசல் விலை உயர்ந்து கொண்டே போகும் நிலையில் இறால் மற்றும் மீன்கள் விலை குறைந்து கொண்டே செல்வதால் மீன்பிடி தொழில் மிகுந்த நஷ்டத்தில் இயங்கிவருகிறது. எனவே மீன்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×