search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்
    X
    தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்

    டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி நேற்று முன்தினம், டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளை பல இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைக்க தடியடி நடத்தப்பட்டது.

    விவசாயிகள், மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி, பென்னாகரம், அரூர் ஆகிய இடங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், மகாதேவன், கோபால் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

    விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
    Next Story
    ×