search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri demonstration"

    உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட பா. ஜனதா சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 

    கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில் உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இதில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 150 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×