search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
    ராமநாதபுரம்:

    இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

    நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு மீண்டும் பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போல் பரவியது. தற்போது மாநில அளவில் பாதிப்பு குறைந்த மாவட்டத்தில் 3-வது இடதில் உள்ளது.

    நேற்று கொரோனா தொற்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. நேற்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 6,401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 6,244 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 20 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    மாநில அளவில் கொரோனா பாதிப்பு குறைந்த முதல் 3 மாவட்டங்களில் ராமநாதபுரம் 3-வது இடத்தை பெற்றுள்ளது. அரியலூரில் 9, கள்ளக்குறிச்சியில் 19 பேர், ராமநாதபுரத்தில் 20 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 137 பேர் இறந்துள்ளனர்.

    கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனை தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து மக்கள் பாதுகாப்பாக வெளியே வர வேண்டும்.

    இந்த ஊரடங்கு மூலமாக நாம் வெளியே செல்வதை தவிர்க்கும்போது மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். இவைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பை நல்கினால் விரைவில் கொரோனாவை விரட்டி விட முடியும் என்றார்.
    Next Story
    ×