என் மலர்

  செய்திகள்

  பள்ளி மாணவிகள்
  X
  பள்ளி மாணவிகள்

  சென்னையில் 30 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை- கல்வி அதிகாரிகள் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 30 சதவீதம் பேர் பள்ளிக்கு வரவில்லை. எந்த காரணத்திற்காக மாணவர்கள் வரவில்லை என்பதை பெற்றோரிடம் கேட்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  சென்னை:

  கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10 மாதமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த 19-ந் தேதி திறக்கப்பட்டன. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

  கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் அமர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  காய்ச்சல், சளி பாதிப்பு உள்ள மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பின்பற்றி மாணவர்களை கண்காணித்து வருகின்றனர்.

  வகுப்பு தொடங்கிய முதல் நாளில் 80 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்திருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. 13 ஆயிரம் பள்ளிகளில் 19 லட்சம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

  ஒவ்வொரு பள்ளியிலும் வராத மாணவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதம் வரை உள்ளது. மாணவர்கள் வருகைப்பதிவு கட்டாயம் இல்லை என்றாலும் பள்ளிக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்கள் வீடுகளில் இருந்து படிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

  பள்ளிக்கு வராத மாணவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் பேசி வருகிறார்கள். எந்த காரணத்திற்காக பள்ளிக்கு அனுப்பவில்லை என்ற விவரத்தை கேட்டறிந்து வருகின்றனர்.

  சென்னையில் மாநகராட்சி, அரசு, உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 679 உள்ளன. இவற்றில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

  தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் வருகின்றனர். ஆனால் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 30 சதவீதம் பேர் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த காரணத்திற்காக மாணவர்கள் வரவில்லை என்பதை பெற்றோரிடம் கேட்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  பள்ளி திறந்த முதல் நாளில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 61 சதவீதமும், 12-ம் வகுப்பு மாணவர்கள் 62 சதவீதமும் வருகை தந்தனர். மறுநாளில் இந்த எண்ணிக்கை 69 மற்றும் 70 சதவீதமாக அதிகரித்தது.

  மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 6,589 பேரும், 12-ம் வகுப்பு மாணவர்கள் 5,122 பேரும் படித்து வருகின்றனர்.

  இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 15 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விரும்பவில்லை. பல்வேறு காரணங்களால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளியில் எடுத்து வரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பெற்றோரிடம் ஆசிரியர்கள் விளக்கி கூறி வருகின்றனர்.

  2 வகையில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் உள்ளனர். நிரந்தரமாக பள்ளிக்கு வராத காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிக்கு வராதவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்படுகிறது’ என்றனர்.

  இதுகுறித்து பள்ளி துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. வருகை பதிவு தற்போது 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. காய்ச்சல் உள்ள மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

  அறிகுறி உள்ள குழந்தைகள் மட்டுமின்றி அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு மாணவி மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்து விட்டு முடிவு தெரிவதற்கு முன்பு பள்ளிக்கு அவர் வந்துள்ளார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×