search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுதப்படையில் சமத்துவ பொங்கல் விழா போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.
    X
    ஆயுதப்படையில் சமத்துவ பொங்கல் விழா போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

    தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஆயுதப்படை போலீசார்

    தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், போலீசார் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படையைச் சேர்ந்த போலீசார் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் வரவேற்று பேசினார். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு, குத்துவிளக்கேற்றி பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    அவர் பேசுகையில், போலீஸ் துறையை பொறுத்தவரை ஒரு மாவட்டத்தின் தாய் வீடு ஆயுதப்படைதான். பொங்கல் என்பது அனைத்து சமுதாயத்தினரும் விரும்பிக் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இது எந்த மதத்தையும் சார்ந்த பண்டிகை கிடையாது. இது தமிழர்களின் விழா. தைப்பொங்கல் என்பது தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது’ என்று கூறினார்.

    பின்னர் ஆயுதப்படை போலீசாருக்கான உறியடி போட்டி நடந்தது. விழாவில் அனைவருக்கும் இனிப்பு, கரும்பு வழங்கப்பட்டது. போலீசாரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    விழாவில் ஆயுதப்படை போலீசார் திரளாக கலந்து கொண்டனர். ஆயுதப்படை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான் நன்றி கூறினார்.
    Next Story
    ×