search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளி மாணவிகள்
    X
    அரசு பள்ளி மாணவிகள்

    மாணவர்களுக்கு வழங்க 2 கோடி மாத்திரைகள் சப்ளை- சுகாதாரத்துறை நடவடிக்கை

    பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை தயாராகி வருகிறது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் வருகிற 19-ந் தேதி திறக்கப்படுகிறது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதியும், பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையிலும் பள்ளிகளை திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மேலும் அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    தொடர்ந்து பள்ளி திறந்த பிறகு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை தயாராகி வருகிறது.

    ஒரு மாணவருக்கு 10 மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2 கோடி மாத்திரைகள் மாவட்டம் வாரியாக கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.

    அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மாத்திரைகள் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படும். அதனை அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

    பொங்கல் விடுமுறைக்கு ஒருநாள் இடைவெளியில் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளையும் இப்போதே ஆயத்தப்படுத்தும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கு மாத்திரை வழங்கப்படும். இதற்கான முன் ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்துவார்கள்.

    பொது சுகாதாரத்துறையினர் மூலம் மாவ டம் வாரியாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் விநியோகிக்க கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாட்டினை செய்வார்கள் என்றார்.

    Next Story
    ×