search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    தமிழகம் வந்தது கொரோனா தடுப்பூசி மருந்து

    தமிழகத்திற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்ட 5,56,500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.
    சென்னை:

    நாடு முழுவதும் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

    அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் ஜன.16-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிலையில் புனேவில் இருந்து தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாக இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, தமிழகத்திற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்ட 5,56,500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.

    சென்னையில் உள்ள மாநில கிடங்கிற்கு கொண்டு வந்து பின்னர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
    Next Story
    ×