search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கனமழை எச்சரிக்கை எதிரொலி- கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று முதல் மூடல்

    கொடைக்கானலில் இடைவிடாது மழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களை பார்வையிட இன்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இடைவிடாது மழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களை பார்வையிட இன்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே இடைவிடாது கன மழை மற்றும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. நகர் பகுதி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளான பூண்டி, மன்னவனூர், கூக்கால், பூம்பாறை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட மலை கிராமங்களிலும் மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.

    மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. சாலைகளின் ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை தொடர்ந்து நட்சத்திர ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நட்சத்திர ஏரியின் மதகு அரை அடி திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மேலும் கொடைக்கானல் மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மர சோலை, குணா குகை, பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று முதல் மூடப்படுகிறது என்றும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த‌ த‌டை தொட‌ரும் என‌ வ‌ன‌த்துறையின‌ர் தெரிவித்துள்ள‌ன‌ர். கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    தற்போது ஓரளவு குறைந்து இருந்தாலும் பொங்கல், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×