search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடமாற்றம்
    X
    இடமாற்றம்

    விற்பனையை அதிகரிக்க சொல்லி கஞ்சா வியாபாரியிடம் பேரம் பேசிய எஸ்.ஐ. இடமாற்றம்

    போடி அருகே கஞ்சா விற்பனையை அதிகரிக்க பேரம் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே குரங்கரணி பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒரு ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் கஞ்சா வியாபாரியிடம் பேசியதாக வெளியானது.

    அதில், மது, கஞ்சா விற்பனையை தொடக்கத்திலேயே அதிகமாக விற்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையை அதிகரிக்க வேண்டும், ஒரே இடத்தில் ஸ்டாக் வைத்துக் கொள்ளாமல் பிரித்து பதுக்கி வைக்க வேண்டும். ரைடு வராமல் இருக்க மாதத்திற்கு ரூ.1 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வோம் என போலீசார் பேசினார். அதற்கு கஞ்சா வியாபாரி நீங்கள் எங்கள் தெய்வம் மாதிரி என கூறுகிறார். இந்த ஆடியோ வேகமாக பரவியது.

    ஆடியோவில் பேசியது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா, போலீஸ்காரர் குமார் என்பது தெரிய வந்தது. இவர்கள் கஞ்சா வியாபாரி ராமுவிடம் பேசி உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கருப்பையாவை வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேல் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×