search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேலம் அருகே தங்கை காதலை கண்டித்த அண்ணன் கொலை- நண்பருடன், காதலன் கைது

    சேலம் அருகே தங்கை காதலை கண்டித்த அண்ணனை கொலை செய்த காதலன் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், நங்கவள்ளி,செலவடை அருகே மாரிவளவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரின் இளைய மகன் அருள்குமார் (வயது23)

    நாமக்கல்லில் இருசக்கர வாகன பட்டறையில் பணிபுரிந்தார். இவரது சித்தப்பா மகளான, 17 வயது சிறுமி சில நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மாரிவளவு மரியம்மன் கோவில் அருகே அருள்குமாரை வழிமறித்த இருவர் சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அருள் குமாரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், அருள்குமாரின் சித்தப்பா மகள், பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் (20) என்பவரை காதலித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளனர்.

    இது தொடர்பாக அருள்குமாருக்கும், பாஸ்கருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹேம்நாத் (20) என்பவருடன் பாஸ்கர் சேர்ந்து கத்தியால் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    பாஸ்கர், ஹேம்நாத் ஆகிய 2 பேரும் ஜலகண்டாபுரம் போலீசில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    டிப்ளமோ முடித்த இருவரும் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றனர். அதே சமயம் கொலை செய்யப்பட்ட அருள்குமாருக்கு மீனா(22) என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர்.

    Next Story
    ×