search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் 800 சிறு மொத்த காய்கறி கடைகள் திறப்பு

    கோயம்பேட்டில் முதற்கட்டமாக 800 சிறுமொத்த காய்கறி கடைகளை திறப்பதற்கு சி.எம்.டி.ஏ. அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கு நேற்றே விற்பனை தொடங்கியது.
    சென்னை:

    கொரோனா பரவல் தீவிரம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் கடந்த மே மாதம் மூடப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று தீவிரம் அடங்கியவுடன், அங்கு உணவு தானிய விற்பனை அங்காடி கடந்த செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்தும், மொத்த காய்கறி விற்பனை கடைகள் செப்டம்பர் 28-ந் தேதியில் இருந்தும் மீண்டும் செயல்பட தொடங்கின.

    பழமார்க்கெட் கடந்த 2-ந் தேதி முதல் இயங்கி வருகிறது. 1,500-க்கும் மேற்பட்ட சிறு மொத்த காய்கறி கடைகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வந்தது. தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு சிறு மொத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கோயம்பேட்டில் முதற்கட்டமாக 800 சிறுமொத்த காய்கறி கடைகளை நேற்று திறப்பதற்கு சி.எம்.டி.ஏ. அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கு நேற்றே விற்பனை தொடங்கியது. சிறிய கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் பலரும் காய்கறிகளை வாங்கி சென்றனர். மீதம் உள்ள கடைகளை திறக்க சி.எம்.டி.ஏ. விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடைகள் திறக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கோயம்பேடு சிறுமொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முத்துகுமார் கூறுகையில், ‘எங்களுடைய கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து கடைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.
    Next Story
    ×