search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெண்ணிடம் நூதனமுறையில் நகை திருடியவர் கைது

    கோவையில் பெண்ணிடம் நூதனமுறையில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் வாலிபருக்கு உடந்தையாக இருந்த வாலிபரும் சிக்கினார்.
    கோவை:

    கோவை காந்திபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பாலகணேஷ். இவருடைய மனைவி கனிமொழி (வயது 30). இவர் நேற்று முன்தினம் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமி ஒருவர் வந்தார். அவர், கனிமொழியிடம், கழுத்தில் நகை அணிந்து சென்றால் யாராவது பறித்து விடுவார்கள். கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதை நம்பிய கனிமொழி தான் அணிந்திருந்த 1½ பவுன் நகையை கழற்றி கைப்பையில் வைத்து கொண்டார்.

    பின்னர் அந்த மர்ம ஆசாமி, கனிமொழியிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தான் ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறியுள்ளார். உடனே அந்த மர்ம ஆசாமி, நானும் அந்த வழியாக தான் செல்கிறேன். நீங்கள் என்னுடன் வண்டியில் வந்தால் அங்கு இறக்கிவிட்டு செல்கிறேன் என்று கூறி உள்ளார். அதை நம்பிய கனிமொழி அந்த ஆசாமியின் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார். முன்னதாக கனிமொழியிடம் இருந்த நகைப்பையை வாங்கி அந்த ஆசாமி வாங்கி வைத்துக் கொண்டார். ஆஸ்பத்திரி அருகே இறக்கி விட்டதும் கனிமொழி, அந்த ஆசாமியிடம் நகை பையை கேட்டார். ஆனால் நகைப்பையை கொடுக்காமல் அந்த மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார் சைக்கிள் எண், மர்ம ஆசாமியின் அடையாளங்களை கண்டறிந்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் (36) என்பதும், அவருக்கு உடந்தையாக ஹரிபிரசாத் (35) என்பவர் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×