என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  தஞ்சாவூர்:

  தஞ்சை கரந்தை மேலநீத்துக்கார தெருவை சேர்ந்தவர் தினகரன். இவருடைய மகன் ராஜா(வயது28). கஞ்சா வியாபாரி.

  இவர் மீதும், ராராமுத்திரைக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் மகேஷ்(42) மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் வழக்கு ஆவணங்களை கலெக்டர் கோவிந்தராவிடம் தாக்கல் செய்தனர்.

  ஆவணங்களை கலெக்டர் கோவிந்தராவ் பரிசீலனை செய்து ராஜா, மகேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×