search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    துப்புரவு தொழிலாளர்களை ரெயில்வே முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

    துப்புரவு தொழிலாளர்களை ரெயில்வே முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே வேலை வாய்ப்பு வாரியம் 2018-ம் ஆண்டு, இணையவழியில் தேர்வு நடத்தி, துப்புரவுத் தொழிலாளர்களைத் தேர்வு செய்து, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியது. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு, தொடர்ந்து அவர்கள் வேலை செய்து வருகின்றார்கள். கொரோனா தொற்றுக் காலத்தில், அவர்கள் பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில், முழுநேரம் பணி ஆற்றி இருக்கின்றார்கள்.

    கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உடை மாற்றுவது, கழிப்பறைகளுக்கு அழைத்துச் செல்வது, இறந்தவர்களின் உடல்களை வீடு கொண்டு சேர்ப்பது என அனைத்து வேலைகளையும் செய்தார்கள். அவர்களுடைய குடும்பங்கள், ரெயில்வே துறையை நம்பித்தான் இருக்கின்றது. எனவே, அவர்களை ரெயில்வே துறை முழுநேரப் பணியாளர்களாக அறிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×