search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்

    விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியது தவறு என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குஷ்பு வலியுறுத்தினார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் திருமாவளவனை மிக மோசமாக சித்தரித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டேக்கில் திருமாவளவனை பலரும் கேவலமாக விமர்சனம் செய்திருந்தனர். 

    இந்நிலையில், அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்  பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தியது சரியா? அவர் பேசியது மிகவும் தவறு. 

    கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்?  பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இதுபற்றி வாய் திறக்காதது ஏன்? 

    கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதை திமுக, காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். 

    திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டில் உள்ளவர்களிடமே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பார்கள்?

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×