search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    6 மாதத்தில் வருகிறது: தமிழ்நாட்டுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் எவ்வளவு? அதிகாரிகள் ஆய்வு

    6 மாதத்தில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கொரோனாவை தடுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவேக்சின், ஜைகோவ்- டி, இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு ஆகிய 3 தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த மருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.)உருவாக்கிய கோவேக்சின், விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருத்துவ நிறுவனத்துடன் கூட்டாக கண்டுபிடித்துள்ள கோவி ஷீல்டு ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று கூறப்பட்டது. என்றாலும் இந்த தடுப்பு மருத்துகள் எப்போது வரும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில், மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் நேற்று சமூக ஊடகங்களில் பின் தொடர்பவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருத்து பயன்பாட்டுக்கு வந்து விடும்.

    அப்போது 25 கோடி பேருக்கு 40 முதல் 50 கோடி டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் முன்னுரிமை பட்டியலை தயாரித்து வழங்க உத்தரவிடப்படும். அதற்கான வடிவமைப்பை மத்திய அரசு தயாரித்து வருகிறது என்று கூறினார்.

    இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் எவ்வளவு? கொரோனா வைரசை எதிர்த்து களப்பணியாற்றும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படஉள்ளது. இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? உடனடியாக தேவைப்படும் தடுப்பூசி எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கும் படி ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதன் படி, அதிகாரிகள் மேற்பார்வையில் மாவட்ட வாரியாக தேவைப்படும் கொரோனா தடுப்பூசி எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக தேவைப்படும் தடுப்பு மருத்து எவ்வளவு என்பது குறித்து தனி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மொத்தம் தேவைப்படும் மருத்து எவ்வளவு என்பது குறித்தும் கணக்கெடுப்பு நடத்து வருகிறது.

    மத்திய அரசு ஒரு வடிவமைப்பை தயாரித்து வருகிறது. அதன் படி மாநிலங்கள் தடுப்பூசி பெறுவதற்கான முன்னுரிமை பெறும் மக்களின் பட்டியலை இந்த மாதத்துக்குள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிரூட்டப்பட்ட கட்டிடம் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தடுப்பூசிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது, தேவையானவர்களுக்கு வழங்குவது பற்றிய ஏற்பாடுகளையும் செய்யும் படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கண்காணிப்பு பணியில் உயர் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

    கொரோனா தடுப்பு மருந்துதேவை, பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவை பற்றிய விவரங்கள் விரைவில் தயாராகி விடும். மாவட்ட வாரியாக அந்த பட்டியல் கணக்கிடப்படும்.

    இதையடுத்து முதல்- அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இதில் மருந்து நிபுணர்கள் மற்றும் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள். இதில் எவ்வளவு தடுப்பு மருந்து தேவை, அதை பாதுகாக்கவும் மக்களுக்கு வழங்கவும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் எவை? என்பது குறித்து மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெற்று மக்களுக்கு வழங்கப்படும்.

    Next Story
    ×