search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    ரே‌ஷன் கடைகளில் பாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு உத்தரவு

    ரே‌ஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரே‌ஷன் கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பாமாயில் வழங்க 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் தேவைப்படுகிறது.

    ரே‌ஷன் கடைகளில் மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை என பொதுமக்களிடமிருந்து அதிக புகார்கள் வந்ததை அடுத்து ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு வழங்க பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்பட உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் பொது விநியோகத் திட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் கிடைக்கிறதா என்பதை துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×