search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

    இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் இன்று காலமானார்.

    இந்நிலையில், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் ராமகோபாலன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×