search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 15 பேருக்கு அபராதம்

    கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி கூறியதாவது:-

    தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கொரோனா விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் இல்லாவிட்டால் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500-ம், முககவசம் அணியாவிட்டால் ரூ.200-ம், சுகாதார துறையால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் ரூ.500, பொது இடங்களில் சமூக இடைவெளி கடை பிடிக்காவிட்டால் ரூ.500, வணிக வளாகம், சலூன் கடை, மசாஜ்சென்டர், உடற்பயிற்சி கூடங்களில் கொரோனா விதி மீறினால் ரூ.5 ஆயிரம், சுகாதார துறையால் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வந்தால் ரூ.500, தடை செய்யப்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் செயல்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதமாக சுகாதார துறை அல்லது காவல்துறை, நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் அப்படி அபராதம் செலுத்தாதவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளகோவிலில் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறிய சமூக இடைவெளி, முககவசம் அணியாத 15 பேருக்கு ரூ.3 ஆயிரம் சுகாதார துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×