search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இல.கணேசன் மற்றும் ராம கோபாலன்
    X
    இல.கணேசன் மற்றும் ராம கோபாலன்

    இல. கணேசன், இராம கோபாலன் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - முக ஸ்டாலின் டுவிட்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இல.கணேசன் மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் இராம கோபாலன் விரைவில் குணமடைந்து பொதுப்பணியில் ஈடுபட விரும்புகிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை: 

    பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    அவர் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேபோல், இந்து முன்னணி அமைப்பின் தலைவரான இராம கோபாலனும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இல.கணேசன் மற்றும் இராம கோபாலன் விரைவில் குணமடைய திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’அன்புக்குரிய இல.கணேசன் கொரோனா வைரஸ் பாதிப்பாலும், இந்து முன்னணித் தலைவர் இராம கோபாலன் உடல் நலக் குறைவினாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற செய்தியறிந்து வேதனையுற்றேன்.

    இருவரும் விரைவில் குணமடைந்து மீண்டும் பொதுப் பணியில் ஈடுபட வேண்டும் என விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.




    Next Story
    ×