என் மலர்

  செய்திகள்

  பாமக
  X
  பாமக

  செப்டம்பர் 6-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக்கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் செப்டம்பர் 6-ந் தேதி இணைய வழியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் செப்டம்பர் 6-ந் தேதி இணைய வழியில் நடைபெறும். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா பங்கேற்கின்றனர்.

  கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பல்வேறு அணிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர். இதில் பங்கேற்பதற்கான இணையதள முகவரி, கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியே அனுப்பப்படும்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×