search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    இந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம்- வைகோ

    இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடி முதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

    தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

    இதற்கிடையே, கனிமொழி எம்.பி.  விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி அறிவுறுத்தி உள்ளார். அதற்கு அவர் கனிமொழி எம்.பி.யை "நீங்கள் இந்தியரா?" என்று வினவி உள்ளார்.

    இந்த சம்பவத்தையடுத்து இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? என்று கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பினார்.

    தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். அதிகாரியிடம் விசாரணை நடத்த சி.ஐ.எஸ்.எப். உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடி முதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம். பன்முகத்தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது என்பதை பாஜக உணரவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×