search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    நவம்பர் வரை ரேசனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்- அமைச்சர் காமராஜ்

    ரேசன் கடைகளில் வரும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு விவசாயிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி அளிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் ரேசனில் நவம்பர் வரை ஏற்கனவே வழங்கப்படும் 20 கிலோ அரிசியுடன் கூடுதலாக ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 
    Next Story
    ×