search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக - தேமுதிக

    இயற்கை வளம், விவசாயத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது.
    சென்னை:

    சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை திரும்பப் பெறுமாறு தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்  பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.  

    இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இயற்கை வளம், விவசாயத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும்,  சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என விஜயகாந்த் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  

    இதற்கிடையே கார்ப்பரேட்டுகளுக்கு 'கார்ப்பெட்' விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×