என் மலர்

  செய்திகள்

  இருதரப்பினர் மோதல்
  X
  இருதரப்பினர் மோதல்

  இருதரப்பினர் மோதல்: 5 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இருதரப்பினர் மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  களக்காடு:

  சிங்கிகுளம் தங்கம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி நாராயணன் (வயது 53). இவர் சம்பவத்தன்று அங்குள்ள முத்தாரம்மன் கோவில் அருகே அதே ஊரைச் சேர்ந்த மீனா என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தொழிலாளி சீனிபாண்டி (38), மீனாவிடம் மது அருந்த பணம் கேட்டு மிரட்டினார். இதைப்பார்த்த நாராயணன் இதனை தட்டிக் கேட்டார். இதனால் நாராயணனுக்கும், சீனிப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சீனிப்பாண்டி, நாராயணனை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். மேலும் நாராயணன் சீனிவாசனை கையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

  இதையடுத்து நாராயணன், அவரது மகன்கள் இசக்கிமுத்து, இசக்கிப்பாண்டி, அருணாசலம் ஆகியோர் சீனிப்பாண்டி வீட்டிற்கு சென்று அவரது வீட்டின் கதவை அரிவாளால் வெட்டினர். இதுகுறித்து நாராயணன், சீனிப்பாண்டி ஆகியோர் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×