search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின் பால்
    X
    ஆவின் பால்

    ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆவின் நிறுவனம் உதவி

    ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    ஆவின் நிறுவனம் கூறியிருப்பதாவது:

    ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் பொருட்டு, அவர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    முதற்கட்டமாக நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவின் முகவர்களாக நியமனம் செய்ய உள்ளனர்.

    சென்னையில் ஆவின் தலைமை அலுவலகத்தில் ரூ.1,000 வைப்புத்தொகை செலுத்தி பால் வண்டி முகவராகலாம். மாவட்டங்களிலுள்ள ஆவின் பொதுமேலாளர் அலுவலகங்களிலும் ரூ.1,000 செலுத்தி முகவராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×