search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    நிலத்தடி நீர் குறையும் வகையில் ராட்சத கிணறுகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

    ராட்சத கிணறுகள் அமைக்கும் பணியை நிரந்தரமாக நிறுத்தவும், நிலத்தடி நீரை உறிஞ்சி செயல்படும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் 6 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மெய்யம்புளி, நொச்சிவாடி, செம்மமடம், குடியிருப்பு, அரியாங்குண்டு, பேக்கரும்பு உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையாகவே பூமிக்கடியில் நிலத்தடி நீர் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்ய மெய்யம்புளி அருகே ரெயில்வே நிர்வாகம் சார்பில் ராட்சத கிணறுகள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக ரெயில்வே துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 6 கிராம மக்கள் மெய்யம்புளி அருகே ரெயில்வே நிர்வாகம் மூலம் ராட்சத கிணறுகள் அமைக்கும் பணியை நிரந்தரமாக நிறுத்தவும், இந்த பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி செயல்படும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என கூறி கிராம மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தாலுகா துணை செயலாளர்கள் வடகொரியா, காளிதாஸ், கிராம நிர்வாகிகள் அந்தோணிசந்தியா, ஆரோக்கியபூபதிராஜன்,ராபின், மரியஜெயம், வெங்கடேசன் உள்ளிட்ட 6 கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×