search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கயத்தாறு அருகே பழ வியாபாரி கொலையில் 3 பேர் கைது

    கயத்தாறு அருகே பழ வியாபாரி கொலையில் 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கயத்தாறு:

    விளாத்திகுளம் அருகே உள்ள வேடப்பட்டி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகய்யா மகன் முத்துப்பாண்டி (வயது 32). கொய்யாப்பழ வியாபாரி. இவர், கோவில்பட்டி பசுவந்தனை ரோடு ஓரத்தில் சிறிய கூடாரம் அமைத்து வியாபாரம் செய்து வந்தார். இதற்காக இவர் தினமும் அதிகாலையில் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கயத்தாறு பகுதிக்கு சென்று தனியார் தோட்டங்களில் கொய்யாப்பழத்தை வாங்கி கொண்டு, கோவில்பட்டி சென்று விற்பனை செய்வது வழக்கம்.

    கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் இவர் கொய்யாப்பழம் விற்பனைக்கு செல்லவில்லை. ஊரடங்கு தளர்த்தபட்ட நிலையில் மீண்டும் விற்பனைக்கு சென்றபோது, இவர் விற்பனை செய்த இடத்தில் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஊர்காவலன் மகன் பசுபதிபாண்டி (19) என்பவர் பழங்கள் விற்பனை செய்துள்ளார். இதை தொடர்ந்து முத்துப்பாண்டிக்கும், பசுபதிபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டி மோட்டார் சைக்கிளில் கயத்தாறு அருகேயுள்ள அய்யனாரூத்தில் உள்ள தனியார் கொய்யா தோட்டத்துக்கு தேவர்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே லோடு ஆட்டோவில் தனது கூட்டாளிகளுடன் பசுபதிபாண்டி வந்தார். அவர்கள் லோடு ஆட்டோவை, மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் பசுபதி பாண்டி தனது கூட்டாளிகளுடன் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பசுபதி பாண்டியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் பேரில் அவரது கூட்டாளிகளான கயத்தாறு அருகே உள்ள நாயக்கர்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார் (23), தடியம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகிறார்கள். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×