search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெற்பயிர்
    X
    நெற்பயிர்

    திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்- அதிகாரி தகவல்

    திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு நெல், நிலக்கடலை, கம்பு, சோளம், ராகி விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்று வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ரமணன் கூறியதாவது:-

    புதிய மாவட்டத்துக்கு இணை இயக்குனர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு தமிழக அரசு வேளாண்மை அலுவலர்கள், களப் பணியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பதிவறை எழுத்தர் எனப் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டு பணிகள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு மாவட்டத்தில் எவ்வாறு பணிபுரிய வேண்டும், விவசாயிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவ மழை தொடங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மானாவாரி பயிர்கள் நிலக்கடலை, கம்பு, சோளம், ராகி, பருத்தி உள்ளிட்ட பயிர்களை 15 ஆயிரம் ஹெக்டேர் அளவில் விவசாயிகள் பயிரிட உள்ளார்கள். விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள், நிலக்கடலை, துவரை, அவரை, சோளம், கம்பு, பருத்தி ஆகிய விதைகளை வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் 50 சதவீத மானியத்தில் வழங்கி வருகிறோம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கி பயன் அடையலாம். விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை களப் பணியாளர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி இயக்குனர் ராகினி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×