என் மலர்

  செய்திகள்

  நீலவேணி
  X
  நீலவேணி

  திருமணம் ஆன 8 மாதத்தில் தேவகோட்டை புதுப்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல் திருமணத்தை கணவர் மறைத்ததால் விரக்தி அடைந்த தேவகோட்டையை சேர்ந்த புதுப்பெண் திருமணம் ஆன 8 மாதத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
  திருச்சி:

  திருச்சி எடமலைப்பட்டிபுதூர் புதுத்தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 25). டிரைவரான இவருக்கும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த நீலவேணிக்கும்(19), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், நீலவேணி தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் படுக்கை அறையில் இருந்த நீலவேணி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால், உடல் கருகி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

  அதற்குள் நீலவேணி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், விஷ்ணு ஏற்கனவே, திருச்சி விமான நிலைய பகுதியை சேர்ந்த லாவண்யாவை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும், முதல் திருமணத்தை மறைத்து நீலவேணியை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுபற்றி நீலவேணி தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த நீலவேணி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

  தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட நீலவேணிக்கு திருமணம் ஆகி 8 மாதங்களே ஆவதால், திருச்சி சப்-கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில், தற்கொலைக்கு தூண்டியதாக விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
  Next Story
  ×