search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி பலி
    X
    தொழிலாளி பலி

    தாராபுரம் அருகே கல் உடைக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

    தாராபுரம் அருகே கல் உடைக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாராபுரம்:

    மூலனூர் அருகே குள்ளன்தள்ளி வலசு கிராமத்தில் சாமிகிரஷர் என்ற பெயரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஜல்லி கல் உடைக்கும் ஜல்லி கிரஷர் உள்ளது. இங்கு ஆபரேட்டராக பணியாற்றியவர் கருப்புசாமி (வயது 38). இவர் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் கிரஷரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எந்திரத்தின் பெல்டில் சிக்கி இறந்தார்.

    இந்நிலையில், கிரஷர் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கிரஷர் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு வர தாமதம் ஆனதால் சக ஊழியர்கள் கிரஷர் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தை அறிந்து மூலனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து மேலாளரிடம் பேசி கருப்புசாமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திய நிலையில், நேற்று முன்தினம் கருப்புசாமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கருப்புசாமியின் மனைவி லட்சுமி அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் கிரஷர் நிறுவனத்தை முற்றுகையிட்டு கருப்புசாமியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் உடனடி நடவடிக்கை எடுக்கும் வரை கருப்பு சாமியின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மூலம் கிரஷர் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கருப்புசாமி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக கூறியதை அடுத்து உறவினர்கள் கருப்புசாமியின் உடலை அவரது மனைவி லட்சுமியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×