search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் வேகமாக பரவும் கொரோனா- 6 மண்டலங்களில் 3 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது.

    சென்னையில் 34 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
     
    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற  விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

    15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,486 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    கோடம்பாக்கத்தில் 3,648 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,041 பேருக்கும், அண்ணாநகரில் 3,431 பேருக்கும் கொரோனா பாதிப்பு  உறுதியாகியுள்ளது.

    தண்டையார்பேட்டையில் 4,370 பேரும், தேனாம்பேட்டையில் 4,143 பேரும், திருவொற்றியூரில் 1,258 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,444 பேருக்கும், பெருங்குடியில் 646 பேருக்கும், அடையாறில்  1,931 பேருக்கும், அம்பத்தூரில் 1,190 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 699 பேருக்கும், மாதவரத்தில் 922 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 639 பேருக்கும், மணலியில் 483 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 
    Next Story
    ×