என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  வீட்டில் வைத்து விபசாரம்- பெண்கள் உள்பட 6 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வத்தலக்குண்டு அருகே வீட்டில் வைத்து விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
  வத்தலக்குண்டு:

  வத்தலக்குண்டு அருகே மேலகோவில்பட்டி சாலையில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

  அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட மதுரை மல்லிகா (வயது25), திருவேங்கடத்தை சேர்ந்த பாண்டிமீனா (30), மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஆசைக்குமார் (30), கச்சிராயிருப்பை சேர்ந்த விவேக் (25), வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (45), தங்கபழம் (45) ஆகியோரை கைது செய்தனர்.

  பெண்களை மதுரையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 4 பேரையும் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×