search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் (கோப்பு படம்)
    X
    தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் (கோப்பு படம்)

    10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15-ல் தொடங்க அனுமதிக்க முடியாது- சென்னை ஐகோர்ட்

    ஜூன் 15-ல் பொதுத்தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது, கொரோனா பரவல் குறைந்தபின்னர் தேர்வை நடத்தலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

    அரசு தலைமை வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு வர முடியாது என்பதால் வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கும்படி அரசுத் தரப்பில்  கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை.

    10ம் வகுப்பு தேர்வு குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும், தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என கண்டிப்புடன் கூறினர்.

    ‘அரசு தலைமை வழக்கறிஞர் வராவிடில் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இன்று முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் சந்திப்பு குறித்த நிலவரங்களை தெரிவியுங்கள்.

    ஜூன் 15-ல் பொதுத்தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது. கொரோனா தொற்று பரவல் குறைந்தபின்னர் தேர்வை நடத்தலாம். ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்குள் அரசு தெரிவிக்கவேண்டும். 10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×