என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  மனைவி பிரிந்து சென்ற விரக்தி- பெயிண்டர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் பெயிண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வல்லம்:

  தஞ்சையை அடுத்துள்ள குருங்குளம் மேலத்தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் மெக்லன் (வயது27). பெயிண்டரான இவர் ஊரடங்கினால் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மெக்லனுக்கும் அவருடைய மனைவி பாரதிக்கும்(25) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடி பழக்கத்தை விடுமாறு இவருடைய மனைவி இவரை கண்டித்துள்ளார்.

  இந்நிலையில் தொடர்ந்து மெக்லன் மது குடித்து வந்ததால் இவருடைய மனைவி அவரிடம் கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

  இதனையடுத்து நேற்று முன்தினம் மெக்லன் அவரின் வீட்டில் உள்ளே வேஷ்டியால் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மெக்லனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மெக்லனின் மனைவி பாரதி கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×