search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊரடங்கை மீறியதாக 5,700 வழக்குகள் பதிவு

    தூத்துக்குடி அருகே ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரத்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

    இதனால் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 5 ஆயிரத்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 6 ஆயிரத்து 716 பேர் கைது செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
    Next Story
    ×